பாதுகாப்பு அமைச்சகம்
இரண்டாவது கட்ட சிறப்பு தூய்மை பிரச்சாரத்தின்போது துண்டாக்கப்பட்ட நெகிழியை சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தும் எல்லை சாலை நிறுவனம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2022 1:30PM by PIB Chennai
நாடு முழுவதும் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட சிறப்பு தூய்மை பிரச்சாரத்திற்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் வகையில் இந்தியாவிலும் பூட்டானிலும் சாலை கட்டுமானத்தில் துண்டாக்கப்பட்ட நெகிழியை பயன்படுத்துவதற்கான சோதனையை எல்லை சாலை நிறுவனம் மேற்கொண்டது. சாலைகளின் கட்டமைப்பு மற்றும் மறு கட்டமைப்பில் துண்டாக்கப்பட்ட நெகிழியை அதிகளவில் பயன்படுத்தும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பூட்டானில் தாண்டக் திட்டத்தின் கீழ் 4.5 கிலோமீட்டர் சாலை மறுசீரமைப்பு, அருணாச்சல பிரதேசத்தில் வார்த்தக் திட்டத்தின் கீழ் 2.5 கிலோமீட்டர் சாலை மறு கட்டமைப்பு மற்றும் உதயக் திட்டத்தின் கீழ் 1.0 கிலோமீட்டர் சாலை மறு கட்டமைப்பு ஆகிய பணிகளில் சிறப்பு பிரச்சாரத்தின் போது எல்லை சாலை நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளது. இதேபோல மிசோரமில் புஷ்பக் திட்டத்தின் கீழ் 5.22 கிலோமீட்டர் சாலையும், அருணாச்சல பிரதேசத்தில் 2.0 கிலோமீட்டர் சாலையும் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மறு கட்டமைக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871212
(Release ID: 1871212)
*******
MSV/RB/SHA
(வெளியீட்டு அடையாள எண்: 1871249)
வருகையாளர் எண்ணிக்கை : 172