தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் எல் முருகன் குல்காம் மாவட்டத்திற்கு அக்டோபர் 27, 28 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 26 OCT 2022 10:12PM by PIB Chennai

மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் குல்காம் மாவட்டத்திற்கு அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார்.

 இப்பயணத்தின் போது அரிகுண்டுவில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். அத்துடன் அதே இடத்தில் வெள்ளத்தடுப்பு அமைப்பின் நான்காம் கட்டத்தை திறந்துவைக்கவுள்ளார். செக்போராவில் அமிர்த சரோவர் மற்றும் பொதுப்பூங்காவையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு இடையே சான்சரில் உள்ள ட்ரௌட் மீன் பண்ணை மற்றும் அமிர்த சரோவர், லக்திபோரா நெஹாமாவில் உள்ள ட்ரௌட் மீன் தீனி ஆலை மற்றும் புகழ்பெற்ற அஹெர்பால் நீர்வீழ்ச்சியையும் அமைச்சர் பார்வையிட உள்ளார். அகர்பாலில் உள்ள மீன் வளர்ப்பு பண்ணை மற்றும் மாடர்காமில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை டாக்டர் முருகன் ஆய்வு செய்யவுள்ளார்.

சவல்ஹாம் ஓய்வுவிடுதியில் மாவட்ட அதிகாரிகளுடான ஆய்வு கூட்டத்திற்கு டாக்டர் முருகன் தலைமைதாங்க உள்ளார்.

தமது பயணத்தின் இரண்டாம் நாளன்று குல்காமில் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். அத்துடன் பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன்  அவர் உரையாடவுள்ளார்.

குல்காமில் இருந்து திருமண மண்டபம் ஒன்றிற்கு டாக்டர் முருகன் அடிக்கல் நாட்டவுள்ளார். நவீன நகர திட்டத்தின் கீழ் ரூ.6.09 கோடி செலவில் இது கட்டப்படவுள்ளது.

தனது சுற்றுப்பயணத்தின் முடிவில், அமைச்சர் குல்காம்    மாவட்ட வளர்ச்சி குழுமம் (டிடிசி), வட்டார வளர்ச்சி குழுமம் (பிடிசி), பஞ்சாயத்ராஜ் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் உரையாடவுள்ளார்.

**************

 

MSV/IR/AG/IDS


(Release ID: 1871169) Visitor Counter : 158
Read this release in: English , Urdu , Hindi , Punjabi