இந்திய போட்டிகள் ஆணையம்

ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் போட்டி நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் 936.44 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது

Posted On: 25 OCT 2022 5:27PM by PIB Chennai

இந்திய வணிகப் போட்டி ஆணையம், கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது நடத்தைகளை மாற்றியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மொபைல் ஆப்ஸ்கள் அனைத்து பயனாளர்களையும் சென்றடைய கூகுள் ப்ளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறி விட்டது. ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ், மறைமுகமாக கூகுளின் ஆன்ட்ராய் ஓஎஸ்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல் ஃபோன்களுக்கான ஆப் உற்பத்தியாளர்களின் முக்கிய விநியோகஸ்தராக கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளது. இது சந்தைக்கு வரும் ஆப் வசதிகளை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.

அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்மார் மொபைல் ஃபோன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ்-கள் பிறவற்றின் ஓஎஸ்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870819

                                **************

KG/ANA/SHA(Release ID: 1870831) Visitor Counter : 276