குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 23 OCT 2022 5:28PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர்  திரு ஜக்தீப் தன்கர், தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“தீபத் திருநாளான தீபாவளி திருநாளில் நம் நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் எனது அன்பான, மகிழ்ச்சிகரமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படும் தீபாவளி, பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, சீதையம்மா மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கிறது.  மேலும் தீமையை ஒழிப்பதற்காக அவர் முனிவர்களிடமிருந்து அறிவைப் பெற்று, காடுகளின் வாழும் பொது மக்களை ஒன்றிணைத்தார்.

நமது இலட்சியமிக்க, கருணை உள்ளம் கொண்ட  ஆளுகையான  ராமராஜ்ஜியத்தின் வருகையையும் தீபாவளி குறிக்கிறது.

ஸ்ரீராமரின் நல்லொழுக்க வாழ்க்கை முறையானது,  நமது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

லட்சிய மன்னன், கீழ்ப்படிதலுள்ள மகன், வெல்ல முடியாத போர்வீரன், நேர்மையான வாழ்க்கை என அவரால் கட்டமைக்கப்பட்ட ‘மர்யதாஸ்’ அவரை ‘புருஷோத்தம’ ராமனாக, தலைமுறை, தலைமுறையாக மனிதகுலத்தால் பின்பற்றப்படும் முன்மாதிரியாக  மாற்றினார்.

தீபாவளி என்பது செல்வச் செழிப்பின் தெய்வமான  லட்சுமி தேவி மற்றும் ஞானம், நல்லதொரு எதிர்காலத்தை அருளும் அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான சந்தர்ப்பமாகும்.

இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் ஞானம், இறையச்சம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும்.

விளக்கு ஒளியின் ஆளுமையும், பிரகாசமும் நம் நாட்டில் நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தட்டும்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1870481) வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Manipuri