சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலை திட்டம் 75-இன்கீழ், மத்தியப் பிரதேசத்தின் ரேவா சித்தி பிரிவில் உள்ள இரட்டை சுரங்கப்பாதை உட்பட சுர்ஹாட் புறவழிச்சாலை பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டதாக நிதின் கட்கரி தெரிவித்தார்

Posted On: 18 OCT 2022 1:15PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலை திட்டம் 75-இன்கீழ், மத்தியப் பிரதேசத்தின் ரேவா சித்தி பிரிவில் உள்ள இரட்டை சுரங்கப்பாதை உட்பட சுர்ஹாட் புறவழிச்சாலை பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடர் ட்விட்களில் தெரிவித்துள்ளார்.

நிலையான வளர்ச்சியுடன் இயற்கை, விலங்கு, மனிதன் ஆகியவற்றின் ஒன்றிணைந்த சகவாழ்வை உறுதி செய்யும் நோக்கில் முன்னேறி வருவதாகவும், மேலும் புறவழிச்சாலையில் இரட்டை சுரங்கப்பாதை உள்ளதால் வனவிலங்களின் நடமாட்டத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

போக்குவரத்தை மாற்றியதன் விளைவாக வெள்ளைப் புலி வாழ்ந்த இயற்கை வாழ்விடம் மீட்கப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி குறிப்பிட்டார். தேவையான அளவில் சுரங்கப்பாதைகள் அமைப்பதால் சாலை விபத்துகள் குறைந்து, சாலைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால் மொகானியா கட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விரைவான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

இரட்டை சுரங்கப்பாதை மூலம் ரேவா - சித்தி இடையேயான பயண தூரம் 7 கிலோ மீட்டர் அளவுக்கும், பயண நேரம் 45 நிமிடங்கள் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய இந்தியாவை நிலைத்தன்மையுடன் மாற்றுவது என்பது பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையிலான நல்லாட்சியின் தனிச்சிறப்பு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

**************

Release ID: 1868750

KG/ANA/SHA



(Release ID: 1868837) Visitor Counter : 166