பிரதமர் அலுவலகம்

75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


"வங்கி சேவைகள் கடைசி மைல் வரை சென்றடைவதை உறுதி செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்"

"நிதி கூட்டாண்மைகள் டிஜிட்டல் கூட்டாண்மைகளுடன் இணைந்தால் ஒரு புதிய வாய்ப்புகளுக்கு வழி ஏற்படும் "

"இன்று இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒன்று என்ற விகிதத்திலான வங்கி கிளைகளின் எண்ணிக்கை ஜெர்மனி, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதை விட அதிகமாக உள்ளது"

"இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது"

"டிஜிட்டல்மயமாக்கல் மூலம் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று உலக வங்கி சொல்லும் அளவிற்கு முன்னேறியுள்ளது"

" நிதி பரிவர்த்தனைகளுக்கு அப்பால் சென்று, 'நல்ல நிர்வாகம்' மற்றும் 'சிறந்த சேவை வழங்கல்' ஆகியவற்றின் ஊடகமாகவும் இன்று வங்கி மாறியுள்ளது"

"ஜன்தன் கணக்குகள் நாட்டில் நிதிச் சேர்க்கைக்கு அடித்தளமிட்டிருந்தால், பின்டெக் நிதிப் புரட்சியின் அடிப்படையை உருவாக்கும்"

"இன்று நாடு முழுவதும் ஜன்தன் வங்கிக் கணக்குகளின் வ

Posted On: 16 OCT 2022 12:50PM by PIB Chennai

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, 75 மாவட்டங்களில் உள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் மக்களின்  வங்கி அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறினார். "சாதாரண குடிமக்களுக்கு எளிதாக வாழ்வதற்கான திசையில் இது ஒரு பெரிய படியாகும்" என்று அவர் கூறினார். அத்தகைய வங்கி அமைப்பில், குறைந்தபட்ச உள்கட்டமைப்புடன் கூடிய அதிகபட்ச சேவைகளை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இவை அனைத்தும் எந்த ஆவணத்தையும் உள்ளடக்காமல் டிஜிட்டல் முறையில் நடக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இது வங்கி நடைமுறையை எளிதாக்கும் அதே வேளையில், வலுவான மற்றும் பாதுகாப்பான வங்கி முறையை வழங்கும் என்றார் அவர் . “சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடன்களைப் பெறுவதற்கு பணத்தை மாற்றுவது போன்ற பலன்களைப் பெறுவார்கள். டிஜிட்டல் வங்கி அலகுகள் அந்த திசையில் மற்றொரு பெரிய படியாகும், இது இந்தியாவின் சாமானியரின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது” என்று அவர் கூறினார்.

 

சாதாரண மக்களுக்கு அதிகராமளித்து சக்தி வாய்ந்தவர்களாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும், அதன் விளைவாக, கடைசி நபரையும், ஒட்டுமொத்த அரசும் அவர்களின் நலன் சார்ந்த திசையில் செல்லும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். அரசு ஒரே நேரத்தில் பணியாற்றிய இரண்டு பகுதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். முதலாவதாக, வங்கி அமைப்பை சீர்திருத்தி, வலுப்படுத்துதல் மற்றும் வெளிப்படையானதாக மாற்றுதல், இரண்டாவதாக நிதி உள்ளடக்கம்.

 

மக்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய கடந்த கால பாரம்பரிய முறைகளை நினைவு கூர்ந்த பிரதமர், வங்கியை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் இந்த அரசு அணுகுமுறையை மாற்றியமைத்துள்ளது என்றார். "வங்கி சேவைகள் கடைசி மைல் வரை சென்றடைவதை உறுதி செய்வதற்கு நாங்கள் முதன்மையான முன்னுரிமை அளித்துள்ளோம்" என்று அவர் கூறினார். ஏழைகள் வங்கிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நாட்களில் இருந்து வங்கிகள் ஏழைகளின் வீட்டு வாசலில் செல்லும் சூழ்நிலை மிகப்பெரிய மாற்றம். இது ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான தூரத்தைக் குறைத்தது. நாங்கள்  தூரத்தை அகற்றியது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, உளவியல் தூரத்தையும் அகற்றினோம். தொலைதூரப் பகுதிகளை வங்கிச் சேவையுடன் உள்ளடக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் 99 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்களில் 5 கிமீ சுற்றளவில் வங்கிக் கிளை, வங்கிக் கடை அல்லது ‘வங்கி மித்ரா’ உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "விரிவான தபால் அலுவலக வலையமைப்பும் இந்திய அஞ்சல் வங்கிகள் வழியாக சாதாரண குடிமக்களுக்கு வங்கித் தேவைகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது" என்று அவர் கூறினார். "இன்று ஒரு லட்சம் வயது வந்த குடிமக்களுக்கு ஒன்று வீதம் இந்தியாவில் உள்ள கிளைகளின் எண்ணிக்கை ஜெர்மனி, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

 

சில பிரிவுகளில் ஆரம்பத்தில் சந்தேகங்கள் இருந்தபோதிலும், இன்று முழு நாடும் ஜன்தன் வங்கிக் கணக்குகளின் சக்தியை அனுபவித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். இந்தக் கணக்குகள் மூலம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மிகக் குறைந்த பிரீமியத்தில் காப்பீடு வழங்க அரசு உதவுகிறது என்று அவர் தெரிவித்தார். “இது ஏழைகளுக்கு அடமானம் இல்லாமல் கடனுக்கான வழியைத் திறந்துள்ளதுடன், பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடி பலன் பரிமாற்றத்தை வழங்கியது. இந்த கணக்குகள் வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு மானியம் வழங்குவதற்கான முக்கிய வழிமுறையாகும், மேலும் விவசாயிகளுக்கான திட்டங்களின் பலன்கள் தடையின்றி உறுதி செய்யப்படலாம்" என்று அவர் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்தை பிரதமர் எடுத்துக்காட்டினார். “இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிய இந்தியாவின் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இதற்கான பெருமை சேரும்” என்று அவர் வலியுறுத்தினார்.

"யுபிஐ இந்தியாவிற்கு புதிய சாத்தியங்களைத் திறந்துள்ளது," பிரதமர் தொடர்ந்தார், "நிதிக் கூட்டாண்மைகள் டிஜிட்டல் கூட்டாண்மைகளுடன் இணைந்தால், ஒரு புதிய சாத்தியக்கூறுகள் திறக்கப்படுகின்றன. யுபிஐ போன்ற ஒரு பெரிய உதாரணம் நம் முன் உள்ளது. உலகிலேயே இந்தவகையில் இது  முதல் தொழில்நுட்பம் என்பதால் இந்தியா பெருமை கொள்கிறது” என்றார். இன்று 70 கோடி உள்நாட்டு ரூபே கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தின் இந்த கலவையானது ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் இது நாட்டின் டிஜிட்டல் பிளவுகளையும் நீக்குகிறது என்று அவர் கூறினார். ஊழலை ஒழிப்பதில் நேரடி பணப்பரிவர்த்தனையின் பங்கை பாராட்டிய அவர், டிபிடி மூலம் பல்வேறு திட்டங்களில் 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். அடுத்த தவணையை நாளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார். “இன்று முழு உலகமும் இந்த டிபிடி மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் சக்தியைப் பாராட்டுகிறது. இன்று இது உலகளாவிய மாதிரியாக பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று உலக வங்கி சொல்லும் அளவிற்கு இது சென்றுள்ளது”, என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளின் மையத்தில் ஃபின்டெக் இருப்பதாகவும், எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் வங்கி அலகுகள்  ஃபின்டெக்கின் இந்த திறனை மேலும் விரிவுபடுத்தும். "ஜன்தன் கணக்குகள் நாட்டில் நிதிச் சேர்க்கைக்கு அடித்தளமிட்டிருந்தால், பின்டெக் நிதிப் புரட்சியின் அடிப்படையை உருவாக்கும்" என்று அவர் கூறினார்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “எதிர்வரும் காலங்களில் டிஜிட்டல் பணமாக இருந்தாலும் சரி அல்லது இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி, பொருளாதாரம் தவிர, பல முக்கிய அம்சங்களுடன்  தொடர்புடையவை. கரன்சி அச்சிடுவதற்கு காகிதம் மற்றும் மை இறக்குமதி செய்யப்படுவதாகவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை பின்பற்றுவதன் மூலம், காகித நுகர்வைக்  குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் பயன் அளிக்கும் அதே வேளையில், தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வங்கியானது இன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு அப்பால் சென்று ‘நல்லாட்சி’ மற்றும் ‘சிறந்த சேவை வழங்கல்’ ஆகியவற்றின் ஊடகமாகவும் மாறியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இன்று, இந்த அமைப்பு தனியார் துறை மற்றும் சிறு-தொழில்துறையின் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல் ஒரு புதிய ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்காத எந்தப் பகுதியும் இந்தியாவில் இல்லை என்று அவர் கூறினார். “இன்று நமது சிறு தொழில்கள், நமது எம்எஸ்எம்இக்களும் ஜெம் போன்ற அமைப்பு மூலம் அரசாங்க டெண்டர்களில் பங்கேற்கின்றன. இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்கள் ஜெம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் வங்கி அலகுகள் மூலம் இந்த திசையில் இன்னும் பல புதிய வாய்ப்புகள் உருவாகும்” என்று அவர் கூறினார்.

"எந்தவொரு நாட்டின் பொருளாதாரமும் அதன் வங்கி அமைப்பு வலுவாக இருப்பதைப் பொறுத்தே முன்னேறுகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில் 2014-க்கு முந்தைய ‘போன் பேங்கிங்’ முறையில் இருந்து டிஜிட்டல் பேங்கிங் முறைக்கு நாடு மாறிவிட்டதாகவும், இதன் விளைவாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ச்சியாக முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பழைய முறைகளை நினைவுகூர்ந்த பிரதமர், 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகளின் செயல்பாடுகளை முடிவு செய்ய தொலைபேசி அழைப்புகள் வந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், தொலைபேசி வங்கி அரசியல், வங்கிகளை பாதுகாப்பற்றதாக மாற்றி, ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களை விதைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசு இந்த அமைப்பை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை விளக்கிய பிரதமர், வெளிப்படைத்தன்மய்யில்  முக்கிய கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். “வாராக்கடன்களை  அடையாளம் காண்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்த பிறகு, பல லட்சம் கோடி ரூபாய் மீண்டும் வங்கி அமைப்பில் கொண்டு வரப்பட்டது. நாங்கள் வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தோம், வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம், ஊழல் தடுப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்தோம். ஒரு வெளிப்படையான மற்றும் அறிவியல் அமைப்பை உருவாக்க, கடன்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் அதே வேளையில், வாராக்கடன்  தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது ஐபிசியின் உதவியுடன் துரிதப்படுத்தப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். “வங்கிகள் இணைப்பு போன்ற முடிவுகள் கொள்கை முடக்கத்தால் பாதிக்கப்பட்டன, அவற்றை நாடு தைரியமாக எடுத்தது. இந்த முடிவுகள் இன்று நம் முன் உள்ளன” என்று அவர் கூறினார். டிஜிட்டல் வங்கி அலகுகள் மற்றும் பின்டெக்கின்  புதுமையான பயன்பாடு போன்ற புதிய முன்முயற்சிகள் மூலம் வங்கி அமைப்புக்கு ஒரு புதிய சுய-உந்துதல் பொறிமுறையானது இப்போது உருவாக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். நுகர்வோருக்கு எவ்வளவு சுயாட்சி உள்ளதோ, அதே வசதி மற்றும் வெளிப்படைத்தன்மை வங்கிகளுக்கும் உள்ளது என்றார் அவர்.

பிரதமர் தமது உரையின் முடிவில், கிராமங்களைச் சேர்ந்த சிறு வணிக உரிமையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முழுமையாக நோக்கிச் செல்லுமாறு வலியுறுத்தினார். நாட்டின் நலனுக்காக முற்றிலும் டிஜிட்டல் மயமாவதற்கு 100 வணிகர்களை வங்கிகளுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "இந்த முன்முயற்சி நமது வங்கி முறை மற்றும் பொருளாதாரத்தை எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், மேலும் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் திறனைக் கொண்டிருக்கும்" என்று திரு மோடி உரையை நிறைவு செய்தார்.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வங்கித் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் பயனாளிகள் காணொலி மூலம் இணைக்கப்பட்டனர்.

பின்னணி

நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக, பிரதமர் திரு நரேந்திர மோடி  75 டிஜிட்டல் வங்கி அலகுகளை  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையில், நமது நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை அமைப்பதாக நிதியமைச்சர் அறிவித்தார். டிஜிட்டல் வங்கியின்  பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இவை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்படுகின்றன. 11 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் துறை வங்கிகள் மற்றும் ஒரு சிறு நிதி வங்கி ஆகியவை இந்த முயற்சியில் பங்கேற்கின்றன.

சேமிப்பு கணக்குகளை துவக்குவது, வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பது, பாஸ்புக்கில் பதிவு செய்வதுநிதி மாற்றம்வைப்பு தொகை முதலீடு, கடன் விண்ணப்பங்கள்காசோலைகளுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான அறிவுறுத்தல்கள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், வங்கி கணக்கு விவரத்தை காணுதல், வரி, கட்டணங்கள் செலுத்துதல், வாரிசுதாரர் நியமனம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வங்கி வசதிகளை மக்களுக்கு வழங்கும் நிலையங்களாக இந்த அலகுகள் செயல்படும்.

 வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் வசதியான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு இவை வழங்கும். டிஜிட்டல் வங்கி அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன்டிஜிட்டல் நிதி அறிவை பரப்பி இணையவெளி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தி பாதுகாக்கும்.  டிஜிட்டல் வங்கி அலகுகள்  வழங்கும் சேவைகள் மற்றும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு  நிகழ் நேர உதவி வழங்க போதுமான டிஜிட்டல் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

*********

PKV/SM/DHA



(Release ID: 1868273) Visitor Counter : 363