நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாஷிங்டன் டிசியில் உலக வங்கியின் வளர்ச்சிக் குழுவின் இரவு உணவுக் கூட்டத்தின் போது, “கற்றல் இழப்புகள்: குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் எதிர்கால உற்பத்தித்திறன் மீதான கோவிட் பெருந்தொற்றின் கடும் பாதிப்புக்கு என்ன செய்ய வேண்டும்” என்ற தலைப்பிலான விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் பங்கேற்றார்

Posted On: 15 OCT 2022 10:01AM by PIB Chennai

வாஷிங்டன் டிசியில் நேற்றிரவு நடைபெற்ற உலக வங்கியின் வளர்ச்சிக் குழுவின் இரவு உணவுக் கூட்டத்தின் போது, “கற்றல் இழப்புகள்: குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் எதிர்கால உற்பத்தித்திறன் மீதான கோவிட் பெருந்தொற்றின் கடும் பாதிப்புக்கு என்ன செய்ய வேண்டும்” என்ற தலைப்பிலான விவாதத்தில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

நிதியமைச்சர் தமது தொடக்க உரையில்,  கோவிட் 19 தாக்கத்தால் பள்ளிகள் மூடப்படுவதை அடுத்து, கற்றல் மீட்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இடைவிடாத கவனம் அவசியம் என்பதை பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் ஒப்புக்கொள்கின்றன என்று கூறினார்.

கோவிட் 19 தொற்றுநோயின் கற்றல் இழப்பின் தாக்கம் தொடர்பாக இந்தியா மேற்கொண்டுள்ள இரண்டு படிகளை சீதாராமன் பகிர்ந்து கொண்டார்:

நவம்பர் 2021 இல், கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்காக, III, V, VII மற்றும் X வகுப்புகளில் உள்ள 3.4 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கிய தேசிய ஆய்வை  இந்தியா நடத்தியது. 2017 ம் ஆண்டு தரத்துடன் ஒப்பிடும்போது தேசிய சராசரி செயல்திறன் 9% ஆகக் குறைந்துள்ளது.

மார்ச் 2022 இல், இந்தியா மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய கற்றல் ஆய்வை மேற்கொண்டது. இது ஒருவரையொருவர் மதிப்பாய்வு செய்வதற்கான உலகின் மிகப்பெரிய மாதிரியாகும், மேலும் இந்தியாவின் 20 பயிற்று மொழிகளில் கற்பிக்கும் திறன் அளவிடப்பட்டது.

இந்த இரண்டு முயற்சிகளும் பிரச்சினையின் அளவை உண்மையான மதிப்பீட்டை வழங்கியதோடு மட்டுமல்லாமல், முறையான தலையீடுகளுக்கான ஆதார அடிப்படையிலான திட்டமிடலையும் வழங்கியதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

உலகளாவிய டிஜிட்டல்  அம்சங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட இந்தியாவின் டிஜிட்டல் தளமான திக்‌ஷா இப்போது பொது களத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறினார்.  கடந்த ஆண்டு, இந்த தளத்தின் மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு QR குறியீட்டு பாடப்புத்தகங்களை வழங்கிய உலகின் முதல் நாடு இந்தியாவாகும் என்று அவர் தெரிவித்தார். அனைத்து ஆர்வமுள்ள நாடுகளுக்கும் திக்‌ஷாவை வழங்க தயாராக இருப்பதாக கூறிய அவர், உலகளவில் டிஜிட்டல் கல்வியை அதிகரிக்க இந்த வாய்ப்பை உலக வங்கி பரிசீலிக்கலாம் என்றும் கூறினார்.

5 வருட காலமாக பலரும் பங்கேற்று தெரித்த பலதரப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தியா தேசிய கல்விக் கொள்கை வரைவை பதிவேற்றியுள்ளதாக நிதியமைச்சர் மேலும் கூறினார். ஜூலை 2020 இல் இந்தக் கொள்கை வெளியிடப்பட்ட நிலையில், தொற்றுநோயின் தாக்கத்தால்,  புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமைகிறது.

இதுபோன்ற அதிக அளவிலான பங்கேற்பு கலந்தாய்வு செயல்முறையானது தரமான கற்றல், அடிப்படை திறன்களின் தேவை, சிறந்த தரமான கற்பித்தல்,கற்றல் ஆற்றல் , ஒவ்வொரு கற்பவருக்கும் திறன் அடிப்படையிலான கல்வி ஆகியவற்றில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளதாக திருமதி சீதாராமன் கூறினார்.  இந்தியா சமீபத்தில் வித்யாஞ்சலி 2.0 ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியது, இது தன்னார்வலர்களை அவர்கள் விரும்பும் பள்ளிகளுடன் நேரடியாக இணைக்கவும் கற்றல் மீட்சியை விரைவுபடுத்தவும் உதவுகிறது என்றார் அவர்.

அடித்தளத் திறன்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உதவும் இந்தியாவின் இலக்கு திட்டம் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

வயது அல்லது தரம்  ஆகியவற்றுக்கு மாறாக,  கற்றல் தேவைகளின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் குழுக்களாகப் பிரித்து, மேற்கொள்ளப்படும்  இந்தியாவின் "சரியான நிலையில் கற்பித்தல்" முயற்சியை ஒரு நல்ல நடைமுறையாக இந்த அறிக்கை  குறிப்பிடுகிறது என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேபோல், ஆசிரியர்களை ஆயத்தப்படுத்த,  நிஷ்டா என்னும் ஒரு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். 

குறைந்த உற்பத்தித்திறன், போதிய வருவாயின்மை மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக இழப்பைச் சந்தித்த தலைமுறை, ஒட்டுமொத்த எதிர்காலப் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்க, உலக வங்கி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கற்றல் இழப்பு மீட்பு செயல் திட்டத்தை உருவாக்க உதவ வேண்டும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

***************


(Release ID: 1867994) Visitor Counter : 179