அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் சிஎஸ்ஐஆர் சங்க கூட்டம் நாளை நடைபெறும்
Posted On:
14 OCT 2022 6:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் சிஎஸ்ஐஆர் சங்க கூட்டம் நாளை (15.10.2022) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு சிஎஸ்ஐஆர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்கள் ஆராய்ச்சித்துறை, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் சிஎஸ்ஐஆர் ஓர் சங்கமாக செயல்படுகிறது. பிரதமர் இதன் தலைவராவார். நாளை நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ்கோயல் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
சிஎஸ்ஐஆர் சாதனைகள் குறித்து புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் சிஎஸ்ஐஆரின் ஆராய்ச்சி முயற்சிகள் தற்போது பசுமை எரிசக்தி தொழில் நுட்பங்கள், வேலைவாய்ப்பை உருவாக்க அறிவியல் தொழில்நுட்பத்தின் தலையீடுகள், ஊரக இந்தியாவில் வருவாய் அளவை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் மீது முதன்மையாக கவனம் செலுத்துகிறது என்றார்.
சிஎஸ்ஐஆர் 2030 தொலைநோக்கின்படி, இதனை வலுப்படுத்துவது 2047-ல் தேசிய தொலைநோக்குடன் இதனை இணைப்பது ஆகியவற்றின் மூலம் இந்தியாவை அறிவியல் ஆற்றல்மிக்கதாக மாற்றுவதில், தற்சார்புடையதாக உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உடனிருந்த அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலாளர் டாக்டர் என் கலைசெல்வி, நாடு முழுவதும் உள்ள 37 பரிசோதனை கூடங்கள், 39 மக்கள் தொடர்பு மையங்கள் ஆகியவற்றின் மூலம் சிஎஸ்ஐஆர் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார். 1942ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிஎஸ்ஐஆர் இந்திய தொழில்துறைக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கணிசமான பங்களிப்பை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(Release ID: 1867877)
Visitor Counter : 199