பாதுகாப்பு அமைச்சகம்
7-வது இந்தியா-பிரேசில் –தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சியில் ஐஎன்எஸ் தற்காஷ் பங்கேற்றது
प्रविष्टि तिथि:
14 OCT 2022 11:16AM by PIB Chennai
7-வது இந்தியா-பிரேசில் –தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சி தென்னாப்பிரிக்காவின் எலிசபெத் துறைமுகத்தில் 2022-அக்டோபர் 10 முதல் 12 வரை நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் தற்காஷ், சேட்டக் ஹெலிகாப்படர் மற்றும் மார்கோஸ் சிறப்பு படைகள் இந்திய கப்பற்படை சார்பில் பங்கேற்றன.
கடல்சார் உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டு ராணுவ பயிற்சியை மேம்படுத்துதல், கடல்சார் குற்றங்களை முறியடித்தல், கடல் வழியான தொடர்புகளை பாதுகாத்தல் உள்ளிட்டவை இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
**************
(रिलीज़ आईडी: 1867755)
आगंतुक पटल : 266