பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெற்காசிய புவிஅறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி ஜியோ இந்தியா 2022 மூன்று நாள் மாநாடு அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கும்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2022 5:05PM by PIB Chennai

மேம்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி குறித்த சமீபத்திய ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்வதற்காக 5-வது தெற்காசிய புவிஅறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி ஜியோ இந்தியா 2022 மூன்று நாள் மாநாடு ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி சிதாபுராவில் அக்டோபர் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) முதல் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைக்கிறார். பெட்ரோலியம் மற்றும் புவியியலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, நார்வே மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டு, பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், தங்கள் நாடுகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் உள்ளனர்.

இந்தியா மற்றும் பிற நாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்பார்கள்

அக்டோபர் 13-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் திரு.ராஜேஷ் குமார் ஸ்ரீவத்சவா, கடந்த 15 ஆண்டுகளில் ஜியோ இந்தியா சர்வதேச மாநாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். “இந்த 3 நாள் மாநாட்டை இயற்கை மற்றும் எரிவாயு துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளதாக” தெரிவித்தார். 

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் மர்ஃபி, ஜாகீர் இப்ராகிம், சார்லஸ் பாயெட், நார்வே நாட்டை சேர்ந்த தேசிகன் சுந்தர்ராஜன் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு, தங்கள் நாடுகளின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்திய தொழில் வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் மற்றொரு சிறப்பம்சமாக, புவியியல் துறையை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்று பெட்ரோலிய துறையின் தொழில்முறை நுணுக்கங்கள் பற்றி பகிர்ந்து கொள்வார்கள்

 **************

KG/SM/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1867533) வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Punjabi