வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கும் திறன் பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு உள்ளது:திரு பியூஷ் கோயல்

Posted On: 13 OCT 2022 3:50PM by PIB Chennai

சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கும் திறன் பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு உள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டதன்   முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புதுதில்லியில் நடைபெற்ற பிரதமரின் விரைவு சக்தி தேசிய பயிலரங்கில் அவர் உரையாற்றினார்.  பிரதமரின் விரைவு சக்தி மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட  சாதனைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் அதை முன்னெடுத்துச் செல்வது குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு கோயல், சிறந்த உள்கட்டமைப்பு வளரச்சிக்காக சமூகத்துறையில்  பிரதமரின் விரைவுசக்தி திட்ட உபயோகம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.  அத்துடன் தொழில்நுட்பத்தின் பயனை நாட்டின் அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

வருங்காலங்களில்  இந்தியாவின் எதிர்காலத்தை பிரதமரின் விரைவுசக்தி திட்டம் தீர்மானிக்கும் என்று  அமைச்சர் கூறினார்.  

--- 

IR/Gee/Sanj/Sne

 


(Release ID: 1867492) Visitor Counter : 223