பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத்துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு ‘பாதுகாப்புத்துறையில் முதலீடு’ என்ற பெயரில் இதுவரை இல்லாத பெரிய அளவிலான முதலாவது நிகழ்ச்சியை 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார். புதுதில்லி

Posted On: 13 OCT 2022 3:10PM by PIB Chennai

பாதுகாப்புத்துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு ‘பாதுகாப்புத்துறையில் முதலீடு’ என்ற பெயரில் இதுவரை இல்லாத பெரிய அளவிலான முதலாவது நிகழ்ச்சியை 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அக்டோபர் 20 அன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறையில் எளிதில் வர்த்தகம் புரியும் வகையில், ஆயுதப்படையின் தேவைகள் மற்றும் அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தொழில்துறைக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுடன் இத்துறையில் முதலீடு செய்வதன் நன்மையை அளிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு அதிகரிக்கும்.

எல் & டி, அதானி டிஃபன்ஸ், பாரத்  ஃபோர்ஜ், சாப், ஏர்பஸ், லாகிட் மார்ட்டின் உள்ளிட்ட இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் காந்தி நகரில், 12-வது பாதுகாப்புத் தளவாட கண்காட்சி, 2022, அக்டோபர் 18, முதல் 22 வரை   நடைபெற உள்ளது.

------

IR/Gee/Sanj/Sne

 



(Release ID: 1867464) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Malayalam