சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உலக மனநல ஆரோக்கிய தினத்தையொட்டி மாநிலங்களில் தொலை மனநல ஆரோக்கிய உதவி மற்றும் கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 10 OCT 2022 4:10PM by PIB Chennai

உலக மனநல ஆரோக்கிய தினத்தையொட்டி  மாநிலங்களில் தொலைபேசி வாயிலாக மனநல ஆரோக்கிய உதவி மற்றும் கட்டமைப்பை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தொடங்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள தேசிய மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் கர்நாடகா ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

மொத்தம் 23 தொலை மனநல ஆரோக்கிய மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில்,  14416 என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

**************

IR/SM/RS/IDS

 (Release ID: 1866549) Visitor Counter : 201