திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் நாடு முழுவதும் 280 இடங்களில் அக்டோபர் 10, 2022 அன்று நடைபெறுகிறது

Posted On: 09 OCT 2022 7:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, வேலை வாய்ப்பு மற்றும் செயல்முறை பயிற்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக, திறன் மேம்பாடு மற்றும்  தொழில் முனைவோர் அமைச்சகம், பிரதமரின் தேசிய தொழிற் பயிற்சி முகாமை 28 மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் 280 இடங்களில் அக்டோபர் 10,  2022 அன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இம்முகாமில் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி  வாய்ப்புகளை அளிக்குமாறு  பல்வேறு உள்ளூர் தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், திறமையானவர்களை கண்டறிந்து, அந்த இடத்திலேயே தங்களுக்கு தேவையானவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது திங்கட்கிழமை தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்  அருகே நடைபெற உள்ள முகாமை கண்டறிந்து பதிவு செய்து கொள்ளலாம்.  5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சிப்பெற்றதற்கான சான்றிதழ், திறன் பயிற்சி சான்றிதழ், ஐடிஐ டிப்ளமோ அல்லது பட்டதாரி ஆகியோர்  இம்முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள தேவையான அனைத்து ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

(Release ID: 1866290)
IR/RS/SRI/RR



(Release ID: 1866388) Visitor Counter : 168