தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய வானொலியுடன் இணைந்து வாக்காளர் நிலையம் என்ற வானொலி தொகுப்பை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது

Posted On: 03 OCT 2022 5:03PM by PIB Chennai

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய வானொலியுடன் இணைந்து வாக்காளர் நிலையம் என்ற வானொலி தொகுப்பை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் திரு சந்திர பாண்டேயுடன் இணைந்து இன்று புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வானி நிலையத்தில் தொடங்கிவைத்தார்.  இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், பிரசார் பாரதி தலைமைத் தேர்தல் அதிகாரி, அகில இந்திய விழிப்புணர்வு வானொலி செய்திப் பிரிவு தலைமை இயக்குநர், தேர்தல் ஆணையத்தின் தூதர் நடிகர் திரு  பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 52 வாரங்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது. அகில இந்திய வானொலியின் விவித் பாரதி, எஃப்எம் ரெயின்போ, எஃப்எம் கோல்டு மற்றும் முதன்மை அலைவரிசைகளில் 15 நிமிடங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்நிகழ்ச்சி ஒலிப்பரப்பாக உள்ளது.  அகில இந்திய வானொலியின் 230 அலைவரிசைகளில் 23 மொழிகளில் இது ஒலிபரப்பப்பட உள்ளது.

வாக்காளர் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் முதலாவது பகுதி அக்டோபர் 7,2022 அன்று ஒலிபரப்பாக உள்ளது. வாக்காளர் பதிவு என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி, இரவு 7.25-க்கு ஒலிப்பரப்பாகும்.

 

------


(Release ID: 1864808) Visitor Counter : 317