குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் தூய்மை இயக்கத்தை நடத்தியது

Posted On: 29 SEP 2022 2:52PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, பல்வேறு தருணங்களில் தூய்மைக் குறித்த செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். புதுதில்லியில் உள்ள கடமைப்பாதைப் பகுதியில் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்த அவர், “தூய்மை இந்தியா மூலம் மட்டுமே மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு சிறந்த உண்மையான அஞ்சலி செலுத்த முடியும்” என்றார்.

2014 அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய இயக்கமாக நாடு முழுவதும் பரவலாக தொடங்கப்பட்டது.

பிரதமரின் இந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அதன் முழுத் திறனுடனும், உறுதியுடனும் ஈடுபட்டுள்ளது. ஆணையத்தின் தலைவர் திரு.மனோஜ் குமார் தூய்மைப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, புதுதில்லியின் கடமைப்பாதையை தூய்மையாக வைத்திருப்பதற்கான தமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, 2022 செப்டம்பர் 17-அன்று, பிரதமரின் பிறந்தநாளையொட்டி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு.நாராயண் ரானே, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர், மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மும்பை ஜுஹு கடற்கரையில், தூய்மை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

                             **************


(Release ID: 1863409) Visitor Counter : 162