பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் லதா மங்கேஷ்கர் சதுக்கத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 28 SEP 2022 1:19PM by PIB Chennai

நமஸ்காரம்!

இன்று நம் அனைவரது மரியாதைக்கும், பாசத்துக்கும் உரிய மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள். தற்செயலாக நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அன்னை சந்திரகாந்தாவின் வழிபாட்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. கடுமையான தவம் செய்யும் ஒருவர் அன்னை சந்திரகாந்தாவின் அருளால் தெய்வீகக் குரலை அனுபவித்து, உணர்கிறார்கள். மூத்த சகோதரி லதா அன்னை சரஸ்வதி தேவியின் பக்தர்களில் ஒருவர். அவர் தனது தெய்வீகக் குரலால் அனைவரையும் வசீகரித்தவர். அவர் தவம் செய்தார். நாம் அனைவரும் வரம் பெற்றோம். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கரின் சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் பிரம்மாண்டமான வீணை இசைக்கருவி இசைப் பயிற்சியின் அடையாளமாக மாறும். இந்த சதுக்கத்தில் பாயும் ஏரியின் நீரில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட 92 வெள்ளைத் தாமரைகள் லதா மங்கேஷ்கரின் வாழ்நாளை குறிப்பதாக அமையும். இந்த புதுமையான முயற்சிக்காக யோகி தலைமையிலான அரசு, அயோத்தி மேம்பாட்டு ஆணையம், அயோத்தி மக்களை மனதார பாராட்டுகிறேன். இந்த சமயத்தில் பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம். அவரது மெல்லிசைப் பாடல்கள் மூலம் அவரின் வாழ்விலிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என நான் பகவான் ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

நண்பர்களே!

சகோதரி லதாவுடனான பல அன்பான, உணர்ச்சிப்பூர்வமான நினைவுகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. அவருடன் பேசும்போதெல்லாம், அவரின் இனிமையான குரல் என்னை மிகவும் ஈர்த்தது. சகோதரி லதா என்னிடம் பேசும்போது, “மனிதன் வயதால் அறியப்படுவதில்லை. செயல்களால் அறியப்படுகிறான். அவன் நாட்டுக்கு எவ்வளவு செய்கிறானோ, அவ்வளவு மேன்மையடைகிறான்” என்று அடிக்கடி கூறுவார். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கரின் சதுக்கம் மற்றும் அவருடனான அனைத்து நினைவுகளும் நாட்டின் மீதான நமது கடமை உணர்வை உணர்த்த உதவும்”.

நண்பர்களே!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தபோது சகோதரி லதாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இறுதியாக, ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அவரால் நம்ப முடியவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகவும், மகிழ்ச்சியாகவும் லதா இருந்தார். சகோதரி லதா பாடிய 'மன் கி அயோத்தி தாப் தக் சூனி, ஜப் தக் ராம் நா ஆயே' என்ற பாடல் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. அயோத்தியின் பிரம்மாண்ட கோயிலுக்கு ராமர் உடனே காட்சியளித்தது போல் இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் மனதில் ராமரை கொண்டு சேர்த்த சகோதரி லதாவின் பெயர் தற்போது அயோத்தியுடன் நிரந்தரமாக இணைந்துள்ளது. ராம் சரித் மானசில் “ராம் தே ஆதிக் ராம் கர் தாசா” இடம்பெற்றுள்ளது. ராமரின் பக்தர்கள் ராமரின் வருகைக்கு முன்பே வந்து விடுவார்கள் என்பது இதன் பொருள். தற்போது லதா மங்கேஷ்கரின் நினைவாக கட்டப்பட்டுள்ள சதுக்கம், ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே வந்து விட்டது”.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862878

**************


(Release ID: 1863341) Visitor Counter : 162