உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை திறந்து வைத்து, உமையா மாதா கேபி கல்வி அறக்கட்டளையின் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 27 SEP 2022 4:57PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று  குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன்  கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை திறந்து வைத்து, உமையா மாதா கேபி கல்வி அறக்கட்டளையின் 750 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், அனைத்து மக்களின் குறிப்பாக, ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி செய்வதாக கூறினார். பிரமரின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம், திரு மோடி, 60 கோடி ஏழை மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சுகாதார வசதிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆயுஷ்மான் சுகாதார கட்டமைப்பு இயக்கத்தின் கீழ், ரூ. 64,000 கோடி முதலீட்டில் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 35,000 புதிய அவசர கால சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். 

கடந்த 2013- 14ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், 2021 -22ம் ஆண்டில் அதன் எண்ணிக்கையை 596 -ஆக  பிரதமர் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 51,000-ல் இருந்து 89,000-மாகவும், முதுநிலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 31,000-ல் இருந்து 60,000-ம் ஆக  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிகரித்துள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862575

**************  

IR-RS-SM(Release ID: 1862650) Visitor Counter : 313