உள்துறை அமைச்சகம்

குஜராத்தின் சனந்த் என்னுமிடத்தில் 350 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று கலந்து கொண்டார்

Posted On: 26 SEP 2022 4:06PM by PIB Chennai

குஜராத்தின் சனந்த் என்னுமிடத்தில்  350 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் பூமி பூஜையில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று  கலந்து கொண்டார்.

திரு அமித் ஷா அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்ட பதாஜ் மேம்பாலம், விரோச்னாநகர் ஆரம்ப சுகாதார நிலையம், அறிவியல் நகருக்கு அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்ட மிலன் கேந்திரா-சமாஜ் வாடியையும் திறந்து வைத்தார்.

திரு அமித்ஷா, மெல்டி மாதாஜி கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஷ்வர் டெலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 350 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் வெளிப்புற நோயாளி பிரிவு, உட்புற வசதிகள், எக்ஸ்ரே, ரேடியாலஜி, ஆய்வகம், ஆபரேஷன் தியேட்டர், மகப்பேறு மருத்துவம், ஐசியூ, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளதாகவும், அனைவருக்கும் ஏற்ற சரியான மருத்துவமனையாக இது மாற்றப்படும் என்றும் அவர் கூறினார். முதற்கட்டமாக, ஒன்பதரை ஏக்கரில் கட்டப்படும் 350 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை ரூ. 500 கோடி செலவில் கட்டப்படும்.  தொழிலாளர் அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையில் இது அமைகிறது. தேவைப்பட்டால் உடனடியாக 350 முதல் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற முடியும். இந்த மருத்துவமனையானது சனந்த் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சனந்த் தாலுகா கிராம மக்கள் அனைவரும் பயனடைவார்கள் என்று திரு அமித் ஷா கூறினார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862263

**************



(Release ID: 1862279) Visitor Counter : 171