உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இந்திய-நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலம் ஃபதேபூர் சென்று ஆய்வு செய்தார்

Posted On: 24 SEP 2022 4:40PM by PIB Chennai

மத்திய உள்துறை  அமைச்சர் திரு அமித் ஷா இந்திய-நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலம்  ஃபதேபூர் சென்று ஆய்வு செய்தார்.

திரு அமித் ஷா, ஃபதேபூர், பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் பிஓபி கட்டிடங்களை திறந்து வைத்து,  பணியாளர்களுடன் உரையாடினார். அவர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், புத்தி காளி மாதா கோவிலுக்குச்  சென்று பிரார்த்தனை செய்தார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக்கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாக அவர் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உழைத்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு, நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நமது எல்லைகளை பாதுகாக்கும் தீர்மானத்தை திரு மோடி காட்டியுள்ளதாக குறிப்பிட்ட திரு அமித் ஷா, 2008-14 வரை, எல்லை உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் ரூ.23,700 கோடியாக இருந்தது, அதை 2014-20ல் இருந்து ரூ.44,600 கோடியாக பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார் எனக் கூறினார்..

 

நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது என்றும், ஆயுதப் படைகளின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நன்றியுள்ள நாடு  என்றும் மறக்காது என்றார்.

 

எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1861935



(Release ID: 1861973) Visitor Counter : 167