சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் 4 வது ஆண்டு விழாவில், டாக்டர் மன்சுக் மாண்டவியா நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் உரையாடினார்

Posted On: 23 SEP 2022 6:24PM by PIB Chennai

 ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின்  மூலம் ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம் மற்றும் சிகிச்சை வசதி அவர்களின் செலவினங்களை கணிசமாகக் குறைத்துள்ளது. ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்றுடன் (2022 செப்டம்பர் 23) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சில பயனாளிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடிய போது இதைத் தெரிவித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார்,  குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 இத்திட்டத்தின் கீழ் நிதி உதவியைப் பெற்றதில் பயனாளிகள்  பலனடைந்தனர். இது குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகளில் தரமான மூன்றாம் நிலை சிகிச்சையைப் பெற அவர்களுக்கு உதவியது.

 

 

 

 இத்திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி டாக்டர் மாண்டவியா, "அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஆயுஷ்மான் பாரத் வலுப்படுத்தியுள்ளது" என்று கூறினார். ஏழை மக்களும் சுகாதார சேவையை பெறும் இந்த தேசிய பணியில் இத்திட்டத்தின் கீழ் சேராத மாநிலங்களை சேருமாறு டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். "ஆயுஷ்மான் கார்டுகளின் இணை முத்திரையுடன், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் விரைவில் அட்டையை வழங்குவோம்" என்று  அவர் கூறினார். இதுவரை, 19 கோடிக்கும் அதிகமான அட்டைகள் உருவாக்கப்பட்டு, 3.8 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861792

**************


(Release ID: 1861822) Visitor Counter : 177