சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகள் இறப்பைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளது

Posted On: 23 SEP 2022 2:39PM by PIB Chennai

ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளது. 22 செப்டம்பர் 2022 அன்று வெளியான இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கை 2020-ன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் இறப்பு விகிதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.

இந்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். “இந்திய மாதிரி பதிவு 2020 அறிக்கையின்படி, குழந்தை இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடியின், சிறந்த தலைமையின்கீழ், மத்திய - மாநில அரசுகளின் சிறந்த நட்புறவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக 2030-க்குள் குழந்தை இறப்பை குறைப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861710

                            **************


(Release ID: 1861744) Visitor Counter : 404