இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

பெண் சாதனையாளர்கள் குறித்த புத்தகத்தை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரும், இங்கிலாந்து தூதரும் வெளியீடு

Posted On: 22 SEP 2022 10:14AM by PIB Chennai

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட் மற்றும் இந்தியாவிற்கான இங்கிலாந்து நாட்டு தூதர் திரு அலெக்ஸ் எல்லீஸ் ஆகியோர் திருமிகு  எல்சா மேரி டி சில்வா, திருமிகு சுப்ரீத் கே. சிங் ஆகியோர் எழுதிய ஷீ இஸ்- விமன் இன் ஸ்டீம் (She Is–Women in STEAM) புத்தகத்தை செப்டம்பர் 21-ஆம் தேதி வெளியிட்டனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டைக் குறிக்கும் மற்றும் ஸ்டீம் என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பாலினம், தலைமைப் பண்பு மற்றும் நிலையான வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் இந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் 75 பெண்களை இப்புத்தகம் கௌரவிக்கிறது. இது போன்ற துறைகளில் பணிபுரிய விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் பெண்களின் துணிச்சல், நம்பிக்கை, அர்ப்பணிப்பு, தனிநபர் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், இந்திய தொழில்வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் மகளிர் பிரிவு, இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதரகத்தின் ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் வாயிலாக சாதனையாளர்களின் காணொலிகளையும் காண முடியும்.

“இந்த ஆண்டு நடைபெற்ற தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வைர விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய இந்திய குடியரசுத் தலைவர், நாட்டை தன்னிறைவு ஆக்குவதில் இந்தியாவின் இளம் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இதனைக் கருத்தில் கொண்டு தான் பல்வேறு கொள்கைகள் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் சூழலுக்குள் சமமான மற்றும் உள்ளடக்கிய நிறுவனமயமாக்கலுக்கும், முக்கியத்துவத்திற்கும் அரசு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. இதில் ஒன்றுதான் 5-வது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை”, என்று பேராசிரியர் அஜய் சூட் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861371

**************

(Release ID: 1861371)



(Release ID: 1861494) Visitor Counter : 408