ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே பணியாளர் தேர்வுகளுக்காக (நிலை-1) கூடுதல் பாதுகாப்புகள்
प्रविष्टि तिथि:
21 SEP 2022 4:21PM by PIB Chennai
ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் முதல்நிலை பணிகளுக்கான 4-ம் கட்டத்தேர்வுகள் 19.09.2022 அன்று தொடங்கியது. ஏற்கனவே மூன்று கட்டத்தேர்வுகள் 12 ரயில்வே மண்டலங்களில் நிறைவடைந்துள்ளது. முதல்நிலை பணிகளுக்கான 1,03,769 காலி பணியிடங்களுக்கு 1,11,57,986 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு கணினி அடிப்படையில், 5 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்வை மிகவும் அனுபவம் வாய்ந்த நிறுவனம் மூலம் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. தேர்வில் தவறான நடைமுறைகளை தவிர்க்கும் முறையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வின் போதும், தேர்வுக்கு பிறகும், கடுமையான கண்காணிப்பு முறைகளை ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
19.09.2022 அன்று நடைபெற்ற தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 108 பேர் பிடிபட்டனர். இதில், 81 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டால், எதிர்காலத்தில் அவர்கள் ரயில்வே பணியாளர் தேர்வு எழுத வாழ்நாள் தடைவிதிக்கப்படுவார்கள்.
முறையற்ற முறையில் தவறான உறுதிமொழிகளை அளிப்பவர்களை நம்பவேண்டாம் என்றும், அது அவர்களுடைய பணி வாய்ப்பை பாதிக்கும். இது தொடர்பாக, இடைத்தரகர்கள் யாரேனும் தொடர்பு கொண்டால், 0755-2746660 என்ற எண்ணிலோ, msrrbbpl[at]gmail[dot]com என்ற முகவரியிலோ புகார் அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861161
**************
(रिलीज़ आईडी: 1861233)
आगंतुक पटल : 233