இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக் கழகத்தில் வீரர்களை நாளை கௌரவிக்கிறார்

Posted On: 19 SEP 2022 3:46PM by PIB Chennai

மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர், அமர்தசரசில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக் கழக மாணவர்களை, நாளை நடைபெறும் ஆண்டு விளையாட்டு விழாவில், பரிசுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

சர்வதேச, கேலோ இந்தியா மற்றும் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விருது வென்ற வீரர்களை, அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக் கழகத்தில், 2022 செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள 52-வது ஆண்டு விளையாட்டு விழாவில் கௌரவிக்க உள்ளார். அப்போது, சிறந்த வீரர்களுக்கான ரொக்கத்தொகை மற்றும் ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு கோப்பை உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறார்.

திரு.அனுராக் தாக்கூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறை அமைச்சர் திரு.குர்மீத் சிங் தலைமையுரை ஆற்றுகிறார். மேலும், பல்கலைக் கழக துணைவேந்தர்  பேராசிரியர் திரு.ஜஸ்பால் சிங் சாந்து, வீரர்கள் மற்றும் விருந்தினர்களிடையே உரையாற்றுவார்.  

குருநானக் தேவ் பல்கலைக் கழகம், விளையாட்டுத் துறையில் அற்புதமான முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும், இந்தியாவின் உயரிய மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருதை 23 முறை வென்று சாதனை படைத்துள்ளது. அர்ஜுனா விருது வென்ற 35 பேரையும், பத்ம ஸ்ரீ விருது பெற்ற 6 பேரையும், துரோணாச்சார்யா விருது வென்ற 2 பேரையும் இந்த பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது.

இதன் உடற்கல்வித்துறை, ஒவ்வொரு ஆண்டும் குருநானக் தேவ் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையேயான (ஆண்கள் மற்றும் பெண்கள்) சாம்பியன் பட்டங்களுக்கு போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. மேலும், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையே போட்டிகளில் பங்கேற்பதற்காக 70-க்கும் மேற்பட்ட அணிகளை (ஆண்கள் மற்றும் பெண்கள்) அனுப்புகிறது. இந்திய விளையாட்டு ஆணையம், ஹாக்கி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான கேலோ இந்தியா மையங்களையும், வாள் வீச்சு மற்றும் வில் வித்தை பிரிவுகளுக்கான கேலோ இந்தியா பயிற்சி நிலையங்களையும், இந்த பல்கலைக் கழகம் அமைத்துள்ளது.     

ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விளையாட்டு பரிசளிப்பு விழாவுக்கு பல்கலைக் கழகம், ஏற்பாடு செய்கிறது. இதில் சுமார் 250 விளையாட்டு வீரர்களுக்கு (சர்வதேச/கேலோ இந்தியா/பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டிகளுக்கு) ரூ.2 கோடி ரொக்கப் பரிசாக வழங்குகிறது. 

                                                        **************

Release ID: 1860565



(Release ID: 1860651) Visitor Counter : 154