சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆலோசனை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நெடுஞ்சாலைத் திட்டங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து அதிகாரபூர்வ பயிற்சி திட்டம்

Posted On: 19 SEP 2022 3:17PM by PIB Chennai

நெடுஞ்சாலைப் பணிகளில் ஈடுபடும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரபூர்வ பயிற்சி அளிப்பது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சென்ற மாதம் முடிவு செய்தது.  இதையடுத்து, “நெடுஞ்சாலைகளுக்கு சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்” தொடர்பாக, இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்களின் கல்விக்கழகத்தால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நொய்டாவில் உள்ள இந்த கல்விக்கழக வளாகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆய்வுகள் மற்றும் திட்ட அனுமதிகள், சாலை பாதுகாப்பு பொறியாளர்கள் மற்றும் இதர நடவடிக்கைகள், நெடுஞ்சாலைகளுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள், திட்டச் செலவு, பொருளாதாரம் மற்றும் நிதிநிலை பகுப்பாய்வு, ஒருங்கிணைந்த விரைவு சக்தி பெருந்திட்டம் உட்பட 15 தலைப்புகளில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு புதிய மற்றும் மாற்று பொருள்கள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டில் விரிவான திட்ட அறிக்கைகளின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டை நோக்கமாக கொண்டது இந்த பயிற்சி. இதன் மூலம் பாதுகாப்பான, தரமிக்க, உறுதியான, நீடிக்கவல்ல நெடுஞ்சாலைகளை அமைக்க முடியும்.

இந்திய நெடுஞ்சாலை பொறியாளர்கள் கல்விக்கழகம், பல்வேறு பயிற்சி திட்டங்களை நடத்துவதோடு, பல சான்றிதழ் வகுப்புகளையும் நடத்தியுள்ளது. 1600க்கும் அதிகமான பயிற்சி திட்டங்களில் 50 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் உட்பட 44 ஆயிரம் பேர் இவற்றில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860548

**************(Release ID: 1860621) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi , Punjabi