பிரதமர் அலுவலகம்
உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் ரஷ்ய அதிபருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
16 SEP 2022 8:31PM by PIB Chennai
உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது கூட்டத்திற்கிடையே, ரஷ்ய அதிபர் மேதகு திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
பல்வேறு நிலைகளில் உள்ள தொடர்பு உட்பட இருதரப்பு உறவுகளின் நீடித்த உத்வேகத்திற்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இம்மாத துவக்கத்தில் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தில் காணொலி வாயிலாக செய்தி வெளியிட்டதற்காக பிரதமருக்கு அதிபர் திரு புடின் பாராட்டு தெரிவித்தார்.
பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் பற்றியும், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த முக்கிய விஷயங்கள் பற்றியும் இருவரும் ஆலோசித்தனர். சர்வதேச உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தற்போதைய புவி அரசியல் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு இடையே உரங்களின் இருப்பு போன்றவை குறித்தும் பேசப்பட்டன.
உக்ரைனில் நடைபெற்ற வரும் போரை நிறுத்தவும், பேச்சுவார்த்தையின் அவசியத்தையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளின் தூதரக உறவின் 75-வது ஆண்டைக் குறிக்கும் இந்த வருடத்தில் இரு தலைவர்களின் முதலாவது சந்திப்பாக இது அமைந்தது.
*********
(Release ID: 1860030)
Visitor Counter : 108
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam