ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீரிழிவு நோய்க்கான சிட்டாகிளிப்டின் மருந்து மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது

Posted On: 16 SEP 2022 4:02PM by PIB Chennai

நீரிழிவு நோய்க்கான சிட்டாகிளிப்டின் மருந்தின் பல்வேறு வகையான கலவையில் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய கலவை மருந்தை இந்திய பார்மசூட்டிகல்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவின் தலைமை செயல் அதிகாரி திரு.ரவி தாதிச் அறிமுகம் செய்து வைத்தார். சிட்டாகிளிப்டின் அதன் வெவ்வேறு வகை கலவையில் அனைத்து மக்கள் மருந்தகங்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும்.

சிட்டாகிளிப்டின் பாஸ்பேட் ஐபி-50 மி.கி. 10 மாத்திரைகளை கொண்ட அட்டை ரூ. 60க்கும், 100 மி.கி. அட்டை ரூ.100-க்கும், சிட்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு 50 மி.கி./500 மி.கி. மாத்திரை (10 கொண்ட அட்டை) ரூ.65-க்கும், சிட்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு 50 மி.கி./1000 மி.கி. மாத்திரை (10 கொண்ட அட்டை) ரூ.70-க்கும் கிடைக்கிறது.

நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த மருந்தான இது மற்ற மருந்து கடைகளை விட மக்கள் மருந்து கடைகளில் குறைவான விலைக்கு கிடைக்கிறது.

பிரதமர் பாரதீய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8,700-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தரமான மரபுசார் மருந்துகளும், அறுவை சிகிச்சை உபகரணங்களும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த கடைகளில் 1600-க்கும் மேற்பட்ட மருந்துகளும், 250 அறுவை சிகிச்சை உபகரணங்களும் கிடைக்கின்றன.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859818

**************


(Release ID: 1859874)