எரிசக்தி அமைச்சகம்
“கட்டடங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் மாற்றுவதற்கு” ‘அங்கன் 2022’-எனும் 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது
Posted On:
15 SEP 2022 4:30PM by PIB Chennai
குறைந்த செலவில் புதிய பசுமை குடியிருப்புகள் மூலம் இயற்கையை விரிவுபடுத்துதல் என்ற பொருள் உடைய அங்கன் 2022 எனும் மூன்று நாள் சர்வதேச மாநாடு 2022 செப்டம்பர் 14 அன்று தொடங்கியது. “கட்டடங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் மாற்றுவது” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை மத்திய மின்சார அமைச்சக செயலாளர் திரு அலோக் குமார் தொடங்கிவைத்தார். இந்தியா – சுவிட்சர்லாந்து கட்டுமான எரிசக்தித் திறன் திட்டத்தின் கீழ், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமையுடன் ஒருங்கிணைந்து மின்சார அமைச்சகத்தின் எரிசக்தி திறன் குழு அங்கன் 2.0 மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் மாத்தூர், சர்வதேச எரிசக்தி முகமையில், எரிசக்தி திறன் பிரிவின் தலைவர் டாக்டர் பிரயான் மதர்வே உட்பட 75 பிரபல பேச்சாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். மேலும் எட்டு தொடக்க அமர்வுகள், எட்டு மையப்பொருள் அமர்வுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், கட்டடங்களில் எரிசக்தி திறன் ஆகியவை தொடர்பாக 15 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.
குறைந்த செலவிலான, இயற்கையான வாழ்விடங்களை நோக்கிய இயக்கத்திற்கு தேசிய எரிசக்தித் திறன் பெருந்திட்ட (நீர்மன்) விருதுகள் இன்று வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புடனான வீடுகள், எரிசக்தி சேமிக்கும் கட்டுமான விதிமுறை ஆகியவற்றை பயன்படுத்தி சிறப்பான கட்டடங்கள் வடிவமைப்பை ஊக்கப்படுத்துவது இந்த விருதுகளின் நோக்கமாகும். கட்டட கலைஞர்கள், பொறியியலாளர்கள், கட்டுமானத்துறையினர், கட்டுமானப் பொருள் தொழில்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள் உட்பட500க்கும் அதிகமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859580
*******
(Release ID: 1859625)