தேர்தல் ஆணையம்

வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் நேரடியாக தகவலை பரிமாறிக்கொள்ள பிஎல்ஓ என்ற மின்னிதழை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 14 SEP 2022 5:37PM by PIB Chennai

இந்தியாவில் மாநிலங்களில் உள்ள  வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் உரையாடும் வகையில், பிஎல்ஓ என்ற மின்னிதழை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. புதுதில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக 350க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் பங்கேற்றனர். அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், உத்திரபிரதேசத்திலிருந்தும், தில்லியிலிருந்தும் 50 வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொண்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் யூடிப் அலைவரிசை மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் சேவைகளை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அளிக்கும் மகத்தான பங்களிப்பை வாக்குச்சாவடி அதிகாரிகள் மேற்கொள்வதாக பாராட்டினார்.

இந்த மின்னிதழ் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் வெளிவரும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859263

*****



(Release ID: 1859328) Visitor Counter : 233