நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 2016-ஐ பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மற்றும் மின்சாதனப் பொருட்களை பொருத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறித்த கையேட்டை திரு கோயல் வெளியிட்டார்
Posted On:
12 SEP 2022 4:31PM by PIB Chennai
இந்திய தரநிர்ணய அமைப்பின் 4-வது நிர்வாக குழுக் கூட்டத்தின் போது இந்திய தேசிய கட்டட விதிமுறைகள் 2016-ஐ பயன்படுத்துவதற்கான வழிகாட்டி மற்றும் மின்சாதனப் பொருட்களை பொருத்துவதில் உள்ள பாதுகாப்புக் குறித்த கையேட்டை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்த முக்கிய இரண்டு ஆவணங்களுடன் சொந்த வீடு கட்டுபவர்கள் அல்லது கட்டடதாரர்களிடமிருந்து வீடு வாங்கியவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வுக்கான மூன்று கையேடுகள் வெளியிடப்பட்டது.
மின் உபகரணங்கள் பொருத்தலின்போது உள்ள பாதுகாப்பு முறைகள் குறித்த கையேட்டை இந்திய தரநிர்ணய ஆணையம் மற்றும் இந்திய சர்வதேச பழுதுபார்ப்போர் சங்கம் ஆகியவை இணைந்து எழுதியுள்ளனர். இந்த கையேடு கட்டடங்களின் வயர் இணைப்பு அளிப்பதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்த ஆவணங்களை கீழ்கண்ட இணையதளங்கள் வாயிலாக காணலாம் https://www.bis.gov.in/index.php/guide-for-homeowners-and-homebuyers/
https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/Booklet-Guide-for-Using-NBC-2016.pdf https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/Handbook-_Electrical-safety-
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858722
******
(Release ID: 1858746)
Visitor Counter : 272