எஃகுத்துறை அமைச்சகம்
தேசிய உலோகவியலாளர் விருது திட்டம்: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, கடைசி நாள் தேதி 11.10.2022
प्रविष्टि तिथि:
12 SEP 2022 12:04PM by PIB Chennai
தேசிய உலோகவியலாளர் விருது 2022–ஐ வழங்க எஃகு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 11.10.2022. விண்ணப்பங்களை https://awards.steel.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் .
இரும்பு மற்றும் எஃகு துறையில் உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு செய்த உலோகவியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் நோக்கங்களை அடையும் வகையில் சிறப்பான முறையில் இத்துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை நிறுவனங்களோ / அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ சமர்ப்பிக்கலாம். ஆண்டு தோறும் பிப்ரவரி 3-ம் நாள் தேசிய உலோவியலாளர் விருது வழங்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய உலோகவியலாளர் விருது, இளைய உலோகவியலாளர் (சுற்றுச்சூழல் அறிவியல்), இளைய உலோகவியலாளர் (உலோக அறிவியல்), இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது என ஐந்து விருதுகள் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858651
******
(रिलीज़ आईडी: 1858666)
आगंतुक पटल : 226