ஜல்சக்தி அமைச்சகம்
2022 ஆகஸ்ட் மாதத்திற்கான ‘தண்ணீர் நாயகர்கள்: உங்களின் தனித்திறன்களை பகிருங்கள்’ போட்டியின் வெற்றியாளர்களை ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
12 SEP 2022 10:15AM by PIB Chennai
தண்ணீர் நாயகர்கள்: உங்களின் தனித்திறன்களை பகிருங்கள்’ போட்டியை நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறையின் ஜல்சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. மைகவ் இணைய பக்கத்தில் 01.12.2021 அன்று தொடங்கப்பட்ட 3-வது போட்டி 30.11.2022 அன்று முடிவடையும்.
இந்த போட்டியின் ஆகஸ்ட் மாதத்திற்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ. 10000 ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இவர்கள் பற்றிய விவரம் வருமாறு:
- திவ்யன்ஷ் டாண்டன்
மீரட்டைச்சேர்ந்த இவர் “பாணி பஞ்சாயத்” எனும் தண்ணீருக்கான இயக்கத்தில் இணைந்து பல்வேறு கிராமங்கள், வீதிகள், பள்ளிகள் போன்றவற்றுக்கு சென்று தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
- வினய் விஸ்வநாத் கவாஸ்
கோவாவைச் சேர்ந்த திட்ட இயக்குனரான இவர், கேலாவாடே கிராமத்தில் வீட்டு மாடியில் மழை நீர் சேகரிப்பு ஆழ்துளை கிணற்றில் நீராதாரம் உருவாக்குதல் ஆகிய பணிகளை செய்தவர்.
- அமித்
உத்திரபிரதேசத்தில் மாலக்பூரா கிராம தலைவரான இவர், தில்லியில் செய்தியாளராக இருந்தார். இந்த கிராமத்தின் தொடக்கப்பள்ளியில் ஆரோக்கியமான உணவு வழங்குதல், தோட்டப்பணி செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார்.
- பபிதா ராஜ்புத் குவாரா
மத்திய பிரதேசத்தின் சத்தார்பூரைச் சேர்ந்தவர். 4 தடுப்பணைகள் கட்டுதல், 2 வடிகால்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டவர்.
- அனுராக் படேல்
பண்டா மாவட்ட ஆட்சியரான இவர், நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுபவர். சந்திரவால் நதியை புனரமைக்கும் முயற்சியாக சில மைல் தூரத்திற்கு கூடுதலாக, நீளத்தை அதிகரித்தவர். இவரது முயற்சியால், மீர்சாபூரில் 664 குளங்கள் பரூக்காபாதில் 101 குளங்களும் புனரமைக்கப்பட்டன.
- சினேகலதா சர்மா
மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தின் பிப்பாரோதா கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஓராண்டு காலமாக தண்ணீர் சேகரிப்பு மற்றும் நிர்வாகத்தில் மெச்ச தகுந்த பணியை செய்து வருகிறார். இந்த பணியில் பெரும்பாலும் பெண்களை முன்னிலைப்படுத்துகிறார். குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் பயிர் வகைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மாதந்தோறும் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளின் வெற்றி கதைகளை 1-5 நிமிட வீடியோக்களாக பதிவு செய்து புகைப்படங்களையும் இணைத்து இந்த பணி குறித்து 300 வார்த்தைகளுக்குள் தகவல் குறிப்பையும், www.mygov.in என்ற இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தவிர, இந்த தகவல்களை waterheroes.cgwb[at]gmail[dot]com என்ற மின்னஞ்சலிலும் அனுப்ப வேண்டும்.
------------------
(Release ID: 1858599)
(रिलीज़ आईडी: 1858640)
आगंतुक पटल : 200