வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா, புலம்பெயர்ந்த இந்தியர்கள் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 11 SEP 2022 11:45AM by PIB Chennai

இந்தியாவும், உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களும் இணைந்து செயல்படும் போது விரைவில் நம் நாடு வளர்ந்த நாடாகும் என்று மத்திய  தொழில்துறை, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் அமெரிக்கப் பயணத்தின் இறுதி நாளன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் அமெரிக்காவில் தான் நடத்திய உரையாடல்களைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர், அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது என்றார். செய்தியாளரின்  கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு பெருமளவு இருக்கும் என்றும், அவர்களின் செயல்பாடுகள் தங்களது தாய் நாட்டிற்கு நன்றிக்கடன் பட்டதை உணரும் வகையில் இருக்கிறது என்றும் கூறினார்.

இந்தியா இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது, உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பது மற்றும் அதற்கு உதவிகரமான  ஸ்டார்ட்-அப் செயல்பாடுகள் மூலம்

முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பது ஆகும்என்று மத்திய அமைச்சர் தெளிவு படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து வரும் யோசனைகள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் இணைப்பதில் அரசாங்கம் வகிக்கக்கூடிய சில பங்கு தொடர்பான பல பரிந்துரைகள் உள்ளன என்று கூறினார்.

முன்னதாக, அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணண் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் தெற்கு கலிபோர்னியாவின் வணிகர்களுடன்  கலந்துரையாடினார்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858422

----


(Release ID: 1858531) Visitor Counter : 176