உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Posted On: 09 SEP 2022 4:00PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக்  பேரணியைகொடியசைத்து தொடங்கி வைத்தார். உள்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு நிஷித் பிரமானிக், கலாச்சார மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சிலேகி உட்பட பலர் கலந்து கொண்டார்.

திரு அமித் ஷா தனது உரையில்,“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடுகிறது. இந்த அமிர்த பெருவிழாவை சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தியதோடு மட்டுமல்லாமல், அதை பல பரிமாணங்களாகவும் மாற்றியுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் புதிய மற்றும் பல பரிமாண சிந்தனையை காட்டுகிறது.

 ‘அமிர்த பெருவிழா’வை மக்களிடம் கொண்டு செல்வதில் திரு நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார். முதலாவதாக, புதிய தலைமுறை, இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நீண்ட, கடினமான சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை அறிமுகப்படுத்துவதும் ஆகும். அடுத்ததாக 75 ஆண்டுகளில் நமது நாடு செய்த சாதனைகளைப் பற்றி பெருமித உணர்வை ஏற்படுத்துவதே இதன் இரண்டாவது குறிக்கோள் ஆகும். மூன்றாவதாக, 2047ல் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது இந்தியாவுக்கான இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும். மேலும் இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பயணத்தின் பாதையை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி  கூறியுள்ளார்.

 இன்று, ‘விடுதலையின் அமிர்தப்பெருவிழா’வின் ஒரு பகுதியாக, 10 பெண்கள் உட்பட 120 பேர், 75 மோட்டார் சைக்கிள்களில் 75 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோட்டார் பைக் ஓட்டுநர்கள் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியாக ஆறு சர்வதேச எல்லைகள் உட்பட 250 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று 75 நாட்களில் 18,000 கிமீ தூரம் பயணித்து, ‘விடுதலையின் அமிர்தப்பெருவிழா’வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக 75 முக்கிய இடங்களுக்கு சென்று, அதன் பின்னர் தேசிய தலைநகருக்குத் திரும்புகிறார்கள்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1858037  

******


(Release ID: 1858127) Visitor Counter : 204