வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா அளிக்கும் அபரிமிதமான வர்த்தக வாய்ப்புகள் பற்றி உலக நாடுகளுக்குத் தெரிவிக்குமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கோரிக்கை

Posted On: 08 SEP 2022 9:07AM by PIB Chennai

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் அணுகுமுறையில் மிகவும் தொழில்முறை சார்ந்த மற்றும் புதுமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்பு முறையுடன் வலுவான இணைப்பை பேணி வருவதால் இந்தியாவின் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார். சான் ஃபிரான்சிஸ்கோவில் இந்திய வம்சாவழியினருடன்  நடைபெற்ற மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவிற்கும், வெளிநாடுகளுக்கும் இடையே உள்ள இணைப்பாக சேவை புரியும் இந்திய வம்சாவளியினரின் தனித்துவம் வாய்ந்த நிலையைக் குறிப்பிட்டுப் பேசிய திரு கோயல், இந்தியா அளிக்கும் அபரிமிதமான வர்த்தக வாய்ப்புகள் பற்றி உலக நாடுகளுக்கு தெரிவிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது துடிப்புமிக்க புத்தொழில் சூழலியலை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியபோது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவம், புதிய சிந்தனைகளை ஆய்வு செய்யும் இளம் திறமைகள் மற்றும் புதிய தீர்வுகளுக்கான அங்கீகாரமாக அது இருந்தது என்று தெரிவித்தார்.

இந்திய புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பாளராக அரசு செயல்படுவதாகத் தெரிவித்த அவர், இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் ஒருவருக்கொருவர் இணையுமாறு வலியுறுத்தினார். ஒவ்வொரு வாய்ப்பையும் சாதகமான வணிக சூழலை உருவாக்குவதற்காக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருவதாக திரு பியூஷ் கோயல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857673

**************


(Release ID: 1857755) Visitor Counter : 154