வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
லாஸ் ஏஞ்சல்சில் நாளை நடைபெற உள்ள இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் திரு பியூஷ் கோயல் பங்கேற்கிறார்
Posted On:
08 SEP 2022 9:58AM by PIB Chennai
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தமது பயணத்தின் இரண்டாவது கட்டமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இன்று சென்றுள்ளார். அங்கு நடைபெற உள்ள இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பு, இந்தியா- அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்துகொள்வதுடன், மேலும் சில முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
இந்திய வம்சவளியினருடன், மதிய உணவு கூட்டத்தில் கலந்துகொண்ட திரு பியூஷ்கோயல், இந்தோ-பசிபிக் பொருளாதார அமைப்பு கூட்டம் பற்றி செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
ஒத்த கருத்துடைய நாடுகளின் விதிமுறைகள் அடிபடையிலான தனித்துவமான, முன்முயற்சி இது என்று கூறிய திரு கோயல், அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலவவும், வர்த்தகத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், இந்த அமைப்பு உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
இந்தியாவும்-அமெரிக்காவும் மிக வலுவான சிறந்த வர்த்தக உறவுகளை பகிர்ந்து வருவதாக கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது என்று கூறிய அவர், அமெரிக்காவில் பல இந்திய நிறுவனங்கள் தொழில் நடத்தி வருவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து ஏராளமான முதலீடுகள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திகுறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857694
**************
(Release ID: 1857727)