கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

28 அடி உயரம் உடைய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 07 SEP 2022 6:59PM by PIB Chennai

புதுதில்லியில் இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (08.09.2022) திறந்து வைக்கிறார். 28 அடி உயரமுள்ள இந்த சிலை நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள அதே இடத்தில் திறக்கப்பட உள்ளது.

மோனோலித்திக் கிரானைட் கற்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் காட்சி  இந்தியா கேட் பகுதியில் 9, 10, 11 செப்டம்பர் 2022 அன்று இரவு எட்டு மணிக்கு இடம் பெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857574

------


(रिलीज़ आईडी: 1857599) आगंतुक पटल : 396
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati