வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகிய 3 தூண்களில் இந்தியா-அமெரிக்கா இடையே 'நம்பிக்கையின் பங்களிப்பு' முன்னேறி வருகிறது - பியூஷ் கோயல்

Posted On: 06 SEP 2022 4:21PM by PIB Chennai

வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் திறமை ஆகிய மூன்று தூண்களில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நம்பிக்கையின் பங்களிப்பு மேலும், மேலும் வலுப்படுவதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். சான் ஃபிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், புகழ் பெற்ற வணிக நிபுணர்கள், தலைமை செயல் அதிகாரிகள், தொழில்துறையின் மூத்த தலைவர்கள், புதிய தொழில் தொடங்குபவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார். அப்போது இந்தியாவுடன் பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆலோசனைகள் மற்றும் புதிய வழிகளை பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் மேலும் கூறினார். அவர்களிடையே காணப்படும் தனிப்பட்ட உற்சாகத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சான் ஃபிரான்சிஸ்கோவின் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி தனது நாளைத் தொடங்கிய அமைச்சர், கதர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர், அமெரிக்காவிலுள்ள 6 பிராந்தியங்களில், இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள, உலகளாவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், இந்தியா மற்றும் இந்திய வம்சாவழியினருக்கான அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857132

**************


(Release ID: 1857168) Visitor Counter : 160