நிதி அமைச்சகம்
பகிர்வுக்குப் பிந்தைய வருவாய்ப் பற்றாக்குறை மானியம் ரூ.7,183.42 கோடி, 14 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது
Posted On:
06 SEP 2022 1:53PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள்துறை, 14 மாநிலங்களுக்கான, பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் ஆறாம் மாதத் தவணை ரூ.7,183.42 கோடியை விடுவித்துள்ளது. 15-வது நிதி ஆணையக் கூட்டத்தின் பரிந்துரையின்படி இது விடுவிக்கப்பட்டுள்ளது.
15-வது நிதி ஆணையக் கூட்டத்தில், பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக, 2023-ஆம் நிதியாண்டில், 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடியை விடுவிக்க பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட மானியத்தொகை, மாநிலங்களுக்கு 12 மாதத்தவணைகளில் சமமான அளவில் விடுவிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான 6-வது மாதத்தவணை வெளியிடப்பட்டதன் மூலம், 2022-23-ல், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் அளவு ரூ.43,100.50 கோடி.
இந்திய அரசியலமைப்பின் 275-வது பிரிவின்கீழ், பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்படுகின்றன. வருவாய்க் கணக்குகளில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்தற்காக, அடுத்தடுத்த நிதி ஆணையக் கூட்டத்தின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கான மானியங்கள் விடுவிக்கப்படுகின்றன.
இந்த மானியங்களைப் பெறுவதற்கான மாநிலங்களின் தகுதி மற்றும் 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்தின் மானிய அளவு, பதினைந்தாவது நிதி ஆணையக் கூட்டத்தால் முடிவெடுக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்துக்கான மொத்தப் பகிர்வை கணக்கில் கொண்டு, அரசின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையேயான இடைவெளி அடிப்படையில் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857100
******
(Release ID: 1857134)
Visitor Counter : 267