சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022 வெளியீடு

Posted On: 05 SEP 2022 1:17PM by PIB Chennai

இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட  தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இந்தி விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது  கீழ்கண்ட ஆவணங்களை வானங்களை இயக்கும்  போது வைத்திருக்க வேண்டும்.

  1. செல்லுபடியாகக் கூடிய பதிவுச் சான்றிதழ்
  2. செல்லுபடியாகக் கூடிய ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம்
  3. செல்லுபடியாகக் கூடிய காப்பீட்டு வாகனம்
  4. செல்லுபடியாகக் கூடிய மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ்

மேற்கண்ட ஆவணங்கள் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் இருந்தால் அதன் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக்கத்துடன் கூடிய ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

இந்தியா தவிர மற்ற நாடுகளில்  மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை இந்தியாவிற்குள் உள்ளூர் பயணிகளையோ சரக்குகளையோ ஏற்றிச் செல்ல அனுமதியில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1856782

*****


(Release ID: 1856840) Visitor Counter : 225