குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்குமாறு மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்

Posted On: 04 SEP 2022 1:39PM by PIB Chennai

மக்கள் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன், அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, இந்த முக்கியமான பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புது தில்லியில் இன்று தாதிச்சி தேஹ்தன் சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்து  உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை என்றும், உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்க முயற்சிக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதியைப் பாராட்டிய அவர், இந்த முயற்சிகள் குடும்ப நிலை வரை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். “இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நல்ல அர்த்தமுள்ள செய்தியை பரப்புவதற்கு ஒவ்வொரு ஊடகவியலாளரும் பங்களிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

இன்று மகரிஷி தாதிச்சி ஜெயந்தியை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்த திரு தன்கர், நம் சொந்த மகிழ்ச்சிக்காகவும், சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்காகவும், மகா முனிவரின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதனைச் சேர்ந்த சாத்விபகவதி சரஸ்வதியால் “சகரத்மக்தா சே சங்கல்ப் விஜய் கா” என்ற நூலும் வெளியிடப்பட்டது., நூலின் முதல் பிரதியை குடியரசு துணைத்தலைவரிடம் பூஜ்யசாத்வி ஜி வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்ள் டாக்டர். ஹர்ஷ் வர்தன், திரு சுஷில் மோடி, தாதிச்சிதேஹ்தன் சமிதியின் மூத்த வழக்கறிஞரும் புரவலருமான  திரு அலோக் குமார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மருத்துவ பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

******



(Release ID: 1856634) Visitor Counter : 169