வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

போக்குவரத்து சேவையில் தொழில் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த செயல்திறன்மிக்க பயனாளர் கலந்துரையாடல் தகவல்பலகையை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது

Posted On: 31 AUG 2022 2:51PM by PIB Chennai

போக்குவரத்து சேவை தொடர்பான பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு  கொண்டு செல்வதற்கு, தொழில்துறை சங்கங்களும், வர்த்தக கூட்டமைப்புகளும்  இனியும் கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.  தொழில் ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை (DPIIT)யின் போக்குவரத்துப் பிரிவு, பயனாளர்-கலந்துரையாடலுக்கான தகவல் பலகையை உருவாக்கி, புதிய டிஜிட்டல் முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது – பயனாளர் சங்கங்கள் இனி இந்த தகவல் பலகையில் லாகின்செய்து, தங்களது பிரச்சினைகள் அல்லது ஆலோசனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று, பிரச்சினைக்கு வெளிப்படையான முறையில் தீர்வுகாணலாம்.   இது, தொழில் துறையினருக்கான புதுமையான முன்முயற்சியாக கருதப்படுவதுடன், ஒரு அமைச்சகம் / துறை சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும், போக்குவரத்துப் பிரிவை அனுமதிக்கும். 

இந்த புதிய தகவல் பலகை,  விரைவில், இத்துறை சார்ந்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.  போக்குவரத்துப் பிரிவின் உயர் அதிகாரிகளும், சரக்குப் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை அமைச்சகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பதை முறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  கட்டமைப்பு வளர்ச்சிக்கான பிரதமரின் பெருந்திட்டத்திலும் (பிஎம்-கதிசக்தி) கட்டமைப்பு திட்டமிடல் குழு(NPG)  அமைப்பது  போன்ற அமைப்பு ரீதியான நடைமுறைகளை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற முயற்சிகள், இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் திறனில் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855739

*******



(Release ID: 1855782) Visitor Counter : 125