கனரகத் தொழில்கள் அமைச்சகம்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்காக வாகனத் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் நார்த்கேப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
30 AUG 2022 12:12PM by PIB Chennai
மின்சார வாகன உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் குறுகிய மற்றும் இடைக்கால பயிற்சி வகுப்புகளை இணைந்து நடத்துவதற்காக தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம், குருகிராமில் உள்ள நார்த்கேப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் வாகனத் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தின் அலுவல் இயக்குநர் திருமதி பமீலா டிக்குவும், நார்த்கேப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் நுபுர் பிரகாஷும் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி பமீலா டிக்கு, வளர்ந்து வரும் துறையான மின்சார வாகன உற்பத்தித் துறையில், ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம், தொழிற்சாலைக்கான திறன் மேம்பாட்டுக்காக நீண்டகால நட்புறவை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய பேராசிரியர் நுபுர் பிரகாஷ், ஆர்வமுள்ள மாணவர்களுக்காக உகந்த படிப்புத் திட்டத்தை நார்த்கேப் பல்கலைக்கழகம் அளிக்கும் என்று கூறினார்.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், மனேசரில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் வாகனத் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது.
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அறிவிக்கையின்படி, மத்திய மோட்டார் வாகன சட்டவிதியின் கீழ், இது வாகனங்களுக்கான பரிசோதனை மையமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855418
***************
(रिलीज़ आईडी: 1855451)
आगंतुक पटल : 172