வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் கள பணியாளர்களை மேலும் விரிவுப்படுத்த உதவும்- திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 29 AUG 2022 4:56PM by PIB Chennai

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்பவரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப்பணியாளர்களை மேலும் விரிவுப்படுத்த மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்பு உதவும் என்று கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற அரசு மின்னணு சந்தையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பரிசு முறையை அவர் தொடங்கிவைத்தார்.

நாட்டின் ஊரகப் பகுதிகளை வளப்படுத்த ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் உதவுவதாக அவர் கூறினார். இப்பொருட்களை சர்வதேச அளவிற்கு காட்சிப்படுத்த சர்வதேச கண்காட்சிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளதாக  அவர் தெரிவித்தார்.

ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பொருட்களை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தலாம் என்று திரு பியூஷ் கோயல் கருத்து தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855279

***************


(रिलीज़ आईडी: 1855300) आगंतुक पटल : 489
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi