பிரதமர் அலுவலகம்
அஹமதாபாத்தில் நடைபெற்ற காதி திருவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
27 AUG 2022 9:28PM by PIB Chennai
குஜராத்தின் பிரபல முதலமைச்சரான திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகா திரு சி ஆர் பாட்டில் அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்கள் திரு பாய்ஜெகதீஷ் பன்சால், திரு ஹர்ஷ் சங்கவி அவர்களே, அஹமதாபாத் மேயர் கீர்த்திபாய் அவர்களே, காதி கிராம தொழில் துறை கழகத்தின் தலைவர் திரு மனோஜ் அவர்களே, மற்றும் பங்கேற்பாளர்களே, குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள சகோதர, சகோதரிகளே,
இந்த சபர்மதி ஆற்றின் கரை இன்று ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் 75 ஆண்டு கால நிறைவை குறிக்கும் வகையில், 7,500 சகோதரிகளும், புதல்விகளும், ஒன்றாக இணைந்து ராட்டையில் நூல் நூற்று புதிய வரலாறு படைத்துள்ளனர். எனது கையால் சிறிது நேரம் நூல் நூற்றது எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமாகும்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, ராட்டையில் நூல்நூற்பது நாட்டின் இதயத் துடிப்பாக இருந்தது. அதேபோன்ற உணர்வை சபர்மதி ஆற்றின் கரையில் இன்று நான் உணர்ந்தேன். சுதந்திர தினத்தின் அமிர்தப் பெருவிழாவின் போது, காதி விழா ஏற்பாடு செய்யப்பட்டது, நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அளித்த சிறந்த பரிசாகும். இன்று குஜராத் மாநில காதி கிராமத் தொழில் துறை கழகம் மற்றும் சபர்மதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள பெரிய அடல் பாலம் ஆகியவையும் திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மற்றும் அஹமதாபாத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
மத்திய அரசின் முயற்சி காரணமாக கைவினைப் பொருட்கள் மற்றும் கையால் நெய்யப்பட்ட கம்பளங்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மின்னணு கொள்முதல் சந்தை இணையதளத்தில் இன்று இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்களுடைய பொருட்களை அரசுக்கு சுலபமாக விற்பனை செய்ய முடிகிறது.
நண்பர்களே,
கொரோனா தொற்று பாதிப்பு காலத்திலும் கூட, என்னுடைய அரசு, கைவினை கலைஞர்கள். நெசவாளர்கள், குடிசை தொழிலைச்சார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவு அளித்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறிய நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதன் மூலம், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை அரசு பாதுகாத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
(Release ID: 1854899)
***************
(Release ID: 1855284)
Visitor Counter : 107
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam