ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் அதன் வெள்ளிவிழாவை நாளை கொண்டாடவிருக்கிறது டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு பக்வந்த் கூபா ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்பார்கள்
Posted On:
28 AUG 2022 2:21PM by PIB Chennai
தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையத்தின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நாளை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, புதிய மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தித் துறை இணையமைச்சர் கௌரவ விருந்தினராக விழாவில் பங்கேற்பார்.
மருந்துகள் தயாரிப்பு, மருந்துகள் தொழில்நுட்பக் கருவிகள் தொழில்துறை, மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விலை கண்காணிப்பு மற்றும் நிதியாதாரப் பிரிவுகள், பொதுமக்கள், நோயாளிகளுக்கான ஆலோசனை குழுக்கள் போன்றோர் நாடு முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் ஒருங்கிணைந்த மருந்து தரவு நிர்வாக நடைமுறை 2.0 (ஐபிடிஎம்எஸ் 2.0) இணையதளம் தொடங்கப்படும். வணிகம் செய்வதை எளிதாக்கும் அரசின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான படிவங்களையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்கச் செய்ய இது உதவும். மேலும் நாடு முழுவதிலும் உள்ளவர்கள் தேசிய மருந்து விலை நிர்ணைய ஒழுங்குமுறை ஆணையத்துடன் தொடர்பு கொள்ள காகிதம் இல்லா செயல்பாட்டையும் இது கொண்டிருக்கும். இது தவிர நவீனப்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பார்மா சாஹி தாம் 2.0 செயலியும் வெளியிடப்படும். பேச்சை அறிதல், தேடப்படும் மருந்துகளின் நிறுவனம், நுகர்வோர் புகார்களைக் கையாளும் முறை போன்றவை இந்தச் செயலியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். மேலும் தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையத்தின் 25 ஆண்டு பயணத்தைக் கால வரிசைப்படி தொகுத்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் 'மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப துறையில் கொள்கையை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்த தரவு சேகரிப்பு' என்ற தலைப்பில் குழு விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த விவாதத்திற்கு நித்தி ஆயோகின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் தலைமை தாங்குவார். திரு சத்யா எஸ் சுந்தரம் ஒருங்கிணைப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855005
***************
(Release ID: 1855035)
Visitor Counter : 225