எஃகுத்துறை அமைச்சகம்
சுழற்சிப் பொருளாதார மாதிரியில் உலோகத் துறை முன்னணியில் இருக்க வேண்டும்: திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா
Posted On:
26 AUG 2022 3:16PM by PIB Chennai
நமது இயற்கை வளங்களில் பெரும்பாலானவை காலியாகும் தருவாயில் உள்ளதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பொருளாதார ரீதியாக லாபம் உள்ள வகையில், இந்த அரிய வளங்களை உலகம் பயன்படுத்தி வருவதாக மத்திய எஃகு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்திய உலோகவியல் நிறுவனத்தின் தில்லி கிளை ஏற்பாடு செய்திருந்த சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் இயற்கை வள சிக்கனம் குறித்த சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் தாது மற்றும் உலோகவியல் துறை மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.
இயற்கை வளங்களை பாதுகாப்பதில், உலகெங்கும் சுழற்சிப் பொருளாதாரம்தான், சிறந்த நடைமுறையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மனித குலத்தின் எதிர்காலம், ‘எடுத்துக்கொள் – உற்பத்தி செய் – அழித்துவிடு’ என்ற மாதிரியில் அதாவது நேரியல் பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைந்துவிடக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பரவலான பயன்பாடு மற்றும் குறைத்தல், மறு சுழற்சி, மறு பயன்பாடு, மீட்சி, மறு வடிவமைப்பு மற்றும் மறு உற்பத்தி ஆகிய 6 அம்சங்களை கொண்டிருப்பதன் காரணமாக, உலோவியல் துறை சுற்றுப் பொருளாதார மாதிரியில் முன்னணியில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் திரு. ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தினார்.
செயில் நிறுவனத்தின் தலைவர் திருமதி சோமா மொண்டல், எஸ் எம் எஸ் குழுமத்தின் இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் மண்டல தலைமைச் செயல் அதிகாரி திரு. உல்ரிச் கிரெய்னர் பாச்சர், மிதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.கே. ஜா, தில்லி ஐஐஎம் தலைவர் டாக்டர் முகேஷ் குமார் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1854648
*******
(Release ID: 1854709)
Visitor Counter : 262