சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா: நாக்பூரில் விரைவில் தொடக்கம்

Posted On: 26 AUG 2022 9:14AM by PIB Chennai

இந்திய அரசின் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று நடைபெற்றது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் முன்னிலையில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, பல்வேறு உதவி உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் வழங்கினார். ரூ. 3483.00 லட்சம் மதிப்பில் 241200 உதவி உபகரணங்கள் 27356 மூத்த குடிமக்களுக்கும், 7780 மாற்றுத்திறனாளிகளுக்கும் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, சமூகத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சேவை செய்வதும், கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் அதிகாரமளிக்கும் வகையில் அரசின் திட்ட பலன்களை அவர்கள் பெறுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளி பூங்காவை நாக்பூரில் உருவாக்க தேவையான  ஆதரவை அமைச்சகம் வழங்கி உள்ளதாகவும், இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறினார். உணர்திறன் தோட்டம், தொடுதல் ஜவுளி பாதை மற்றும் நறுமணத் தோட்டம், திறன் பயிற்சி வசதி, மறுவாழ்வு வசதி, விளையாட்டு மற்றும் தகவல் சார்ந்த வசதி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நவீன வசதிகள் இந்தப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854530

 ***************


(Release ID: 1854624) Visitor Counter : 215