பாதுகாப்பு அமைச்சகம்
அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர்
Posted On:
24 AUG 2022 4:08PM by PIB Chennai
அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இன்று (ஆகஸ்ட் 24, 2022) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், எல்லை கடந்த தீவிரவாதம் உள்ளிட்ட எந்த வழியிலும் மனித நேயத்திற்கு எதிரான குற்றச்செயல் நடவடிக்கைகள் தீவிரவாதமாகும் என்று கூறினார்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைந்து பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா ஆதரவு அளிப்பதாகக் கூறிய அவர், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார். தீவிரவாதிகளின் புகலிடமாக ஆஃப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்த இந்தியாவின் கவலையை தெரிவித்த திரு ராஜ்நாத் சிங், இப்பிரச்சினையில் தீர்வுகாண ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற புதுதில்லி ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ நா பொதுச் செயலாளர், ஐ நா அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1854128
***************
(Release ID: 1854155)
Visitor Counter : 250